திருக்குறள்- 95. மருந்து
திருக்குறள் 95. மருந்து அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
95. மருந்து
941. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று
942. மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
943. அற்றால் அளவுஅறிந்து உண்க அஃதுஉடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு
944. அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து
945. மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
946. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
947. தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்
நோய்அளவு இன்றிப் படும்
948. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
949. உற்றான் அளவும் பிணிஅளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்
950. உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால் நால்கூற்றே மருந்து
