திருக்குறள்- 98. பெருமை
திருக்குறள் 98. பெருமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
98. பெருமை
971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்
972. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
973. மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல் லவர்
974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு
975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்
976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
977. இறப்பே புரிந்த தொழிற்றுஆம் சிறப்பும்தான்
சீர்அல் லவர்கண் படின்
978. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
979. பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துஸவிடல்
980. அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறிவிடும்
