திருக்குறள்- 99. சான்றாண்மை

திருக்குறள் 99. சான்றாண்மை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

99. சான்றாண்மை

981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து

சான்றாண்மை மேற்கொள் பவற்கு

982. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்

எந்நலத்து உள்ளதூஉம் அன்று

983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

984. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை

சொல்லா நலத்தது சால்பு

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

மாற்றாரை மாற்றும் படை

986. சால்பிற்குக் கட்டளை யாதுஎனின் தோல்வி

துலையல்லார் கண்ணும் கொளல்

987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு

988. இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்

திண்மை உண்டாகப் பெறின்

989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்

தாங்காது மன்னோ பொறை