திருக்குறள்- 100. பண்புடைமை

திருக்குறள் 100. பண்புடைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

100. பண்புடைமை

991. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்

பண்புடைமை என்னும் வழக்கு

992. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு

993. உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால் வெறுத்தக்க

பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு

994. நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார்

பண்புபா ராட்டும் உலகு

995. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்புஉள பாடுஅறிவார் மாட்டு

996. பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன்

997. அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்

998. நண்புஆற்றார் ஆகி நயம்இல செய்வார்க்கும்

பண்புஆற்றார் ஆதல் கடை

999. நகல்வல்லர் அல்லார்க்கு மாஇரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள்

1000. பண்புஇலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால்திரிந் தற்று