திருக்குறள்- 101. பண்புடைமை

திருக்குறள் 101 பண்புடைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

101. நன்றியில் செல்வம்

1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுஉண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல்

1002. பொருளான்ஆம் எல்லாம்என்று ஈயாது இவறும்

மருளான்ஆம் மாணாப் பிறப்பு

1003. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்

தோற்றம் நிலக்குப் பொறை

1004. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்

நச்சப் படாஅ தவன்

1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல்

1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்குஒன்று

ஈதல் இயல்பிலா தான்

1007. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்

பெற்றாள் தமியள்மூத் தற்று

1008. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

நச்சு மரம்பழுத் தற்று

1009. அன்புஒரீஇத் தன்செற்று அறம்நோக்காது ஈட்டிய

ஒண்பொருள் கொள்வார் பிறர்

1010. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

வறம்கூர்ந்து அனையது உடைத்து