திருக்குறள்- 102. நாணுடைமை
திருக்குறள் 102. நாணுடைமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
102. நாணுடைமை
1011. கருமத்தால் நாணுதல் நாணு திருநுதல்
நல்லவர் நாணுப் பிற
1012. ஊண்உடை எச்சம் உயிர்க்குஎல்லாம் வேறுஅல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு
1013. ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு
1014. அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு அஃதுஇன்றேல்
பிணிஅன்றோ பீடு நடை
1015. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு
1016. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்
1017. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாண்ஆள் பவர்
1018. பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து
1019. குலம்சுடும் கொள்கை பிழைப்பின் நலம்சுடும்
நாண்இன்மை நின்றக் கடை
1020. நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று
