திருக்குறள்- 103. குடிசெயல் வகை
திருக்குறள் 103. குடிசெயல் வகை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
103. குடிசெயல் வகை
1021. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுஉடையது இல்
1022. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையான் நீளும் குடி
1023. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
1024. சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு
1025. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
1026. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்
1027. அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை
1028. குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து
மானம் கருதக் கெடும்
1029. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு
1030. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும்
நல்ஆள் இலாத குடி
