திருக்குறள்- 104. உழவு

திருக்குறள் 104. உழவு அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

104. உழவு

1031. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழன்றும் உழவே தலை

1032. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து

1033. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற்று எல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்

1034. பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்

1035. இரவார் இரப்பார்க்குஒன்று ஈவர் கரவாது

கைசெய்துஊண் மாலை யவர்

1036. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

விட்டேம்என் பார்க்கு நிலை

1037. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்

வேண்டாது சாலப் படும்

1038. ஏரினும் நன்றால் எருஇடுதல் கட்டபின்

நீரினும் நன்றுஅதன் காப்பு

1039. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து

இல்லாளின் ஊடி விடும்

1040. இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின்

நிலம்என்னும் நல்லாள் நகும்