திருக்குறள்- 106. இரவு

திருக்குறள் 106. இரவு அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

THIRUKKURAL

T Vasanthal

பொருட்பால்

106. இரவு

1051. இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்

அவர்பழி தம்பழி அன்று

1052. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை

துன்பம் உறாஅ வரின்

1053. கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று

இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து

1054. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

கனவினும் தேற்றாதார் மாட்டு

1055. கரப்இலார் வையகத்து உண்மையான் கண்நின்று

இரப்பவர் மேற்கொள் வது

1056. கரப்புஇடும்பை இல்லாரைக் காணின் நிரப்புஇடும்பை

எல்லாம் ஒருங்கு கெடும்

1057. இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துஉள்ளம்

உள்ளுள் உவப்பது உடைத்து

1058. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்

மரப்பாவை சென்றுவந் தற்று

1059. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம் இரந்துகோள்

மேவார் இலாஅக் கடை

1060. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை

தானேயும் சாலும் கரி