திருக்குறள்- 108. கயமை
திருக்குறள் 108. கயமை அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

பொருட்பால்
108. கயமை
1071. மக்களே போல்வர் கயவர் அவர்அன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்
1072. நன்றறி வாரின் கயவர் திருஉடையர்
நெஞ்சத்து அவலம் இலர்
1073. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்துதொழுக லான்
1074. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்
1075. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது
1076. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்து உரைக்க லான்
1077. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு
1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்
1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்
1080. எற்றிற்கு உரியர் கயவர்ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து
