திருக்குறள்- 109. தகையணங்குறுத்தல்
திருக்குறள் 109. தகையணங்குறுத்தல் அதிகாரத்தின் ஒலி உரை, குறள்களின் பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
THIRUKKURAL

காமத்துப்பால்
களவியல்
109. தகையணங்குறுத்தல்
1081. அணங்கு-கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு
1082. நோக்கினாள் நோக்குஎதிர் நோக்குதல் தாக்குஅணங்கு
தானைக்கொண்டு அன்னது உடைத்து
1083. பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை இனிஅறிந்தேன்
பெண்தகையால் பேர்அமர்க் கட்டு
1084. கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்
1085. கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து
1086. கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்குஅஞர்
செய்யல மன்இவள் கண்
1087. கடாஅக் களிற்றின்மேல் கண்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்
1088. ஒள்நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும்என் பீடு
1089. பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணிஎவனோ ஏதிஇல தந்து
1090. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று
