குறுந்தொகை: பாடல் 164
குறுந்தொகை 164 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண் பெரும் பௌவம் அணங்குக தோழி!
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!
காதற் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது.
மாங்குடிமருதன்
கணை - திரட்சி
கோடு - கொம்பு
கமஞ் சூல் - நிறைந்த கரு
மட நாகு - பெண்மீன்
துணர் - கொத்து
கொக்கு - மாமரம்
தேக்கொக்கு - தேமா மரம்(தீம் பழம்)
பவ்வம் - கடல்
அணங்குக - வருத்துக
அனையேம் - அத்தகைய குற்றமுடையேம்
குறுந்தொகை 8 ஆவது பாடல் ஒலி உரை கேளுங்கள்
