குறுந்தொகை: பாடல் 268

குறுந்தொகை 268 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''சேறிரோ?'' எனச் செப்பலும் ஆற்றாம்;

''வருவிரோ?'' என வினவலும் வினவாம்;

யாங்குச் செய்வாம்கொல்?-தோழி!-பாம்பின்

பையுடை இருந் தலை துமிக்கும் ஏற்றொடு

நடு நாள் என்னார், வந்து,

நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

கருவூர்ச் சேரமான் சாத்தன்

பை - படம்

துமிக்கும் - அறுக்கும், துண்டாக்கும்

ஏறு - இடி,உருமு,உரும்

கடும் பாம்பு வழங்கும் தெரு(354:5)

பையுடை இருந் தலை துமிக்கும் ஏறு(குறுந்.269:3-4)

கடிது இடி உருமின் பாம்பு பை அவிய/

இடியொடு மயங்கி இனிது வீழ்ந் தன்றே(குறுந்.391:3-4)

பாஅய் பாம்பின்/பை பட இடிக்கும் கடும் குரல் ஏறு(அகம்.323:9-10)

... ...பொறிவரி/

வெஞ்சின அரவின் பைந் தலை துமிய/

நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள் (குறுந்.190:3-5)

நெடுவரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்/

கடு விசை உருமின் கழறு குரல்(குறுந்.158:1-2)

உத்தி அரவின் பைத் தலை துமிய,/

உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை,(அகம்.202:10-11)

*உத்தி-படப் பொறி

உர-வலிமை,உரும்-இடி,

உரறும்-முழங்கும்

அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு

அணங்குடை அரவின் அருந் தலை துமிய,(புறம்.211:1-2)

விசும்பு வீழ் கொள்ளி யின் பைம் பயிர் துமிப்ப (குறுந்.189:4)

நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய(அகம்.254:14)

song 189

• குறுந்தொகை 189 / Kurunthohai 189

நன்றி: http://tamil concordance.in