குறுந்தொகை: பாடல் 297
குறுந்தொகை 297 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
''அவ் விளிம்பு உரீஇய கொடுஞ் சிலை மறவர்
வை வார் வாளி விறற் பகை பேணார்,
மாறு நின்று எதிர்ந்த ஆறுசெல் வம்பலர்
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும்
கல் உயர் நனந் தலை, நல்ல கூறி,
புணர்ந்து உடன் போதல் பொருள்'' என,
உணர்ந்தேன்மன்ற, அவர் உணரா ஊங்கே.
தோழி வரைவு மலிந்தது.
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணன்.
வை - கூர்மை
வார் - நீட்சி
வாளி - அம்பு
விறற்பகை - வெற்றி தரும் அம்பு
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை (அகம். 67:14)
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை
(அகம் 109:8)
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை(அகம் 157:5)
ஆள் அழித்து உயர்த்த அஞ்சு வரு பதுக்கை
(அகம். 215:11)
அம்பு விட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை
(புறம் 3:21)
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை (ஐங் 362:1)
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் (அகம். 151:11)
அவ்விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
செவ் வாய்ப் பகழி செயிர் நோக்கு ஆடவர் (அகம். 371:1-2)
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின்,
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
வெஞ் சுரம் இறந்த காதலர்... (அகம்.175:1-6)
குறுந்தொகை 77 : • குறுந்தொகை 77 / Kurunthohai 77
நன்றி: http ://tamil concordance.in
