குறுந்தொகை: பாடல் 301
குறுந்தொகை 301 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.
வரைவிடை வைப்ப, ''ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
குன்றியன்
முழவு - குட முழவு
அரைய - அடிப் பகுதி
தடவு - வளைவு
சிறு கோல் - சிறிய சுள்ளிகள்
குடம்பை - கூடு
வயவு - அயர்ச்சி
பானாள்(பால்+நாள்) - பாதி நாள்,நடு இரவு
மன்றம் - அம்பலம்/ஊர்ப் பொதுவிடம்
போழும் - பிளக்கும்
இன் மணி - தேர் மணி ஓசை
அரவம் - ஒலி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்/
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடை... (குறுந்.160:1-2)
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை/
அன்றிலும் பையென நரலும் (குறுந்177:3-4)
வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்/
ஆக்கஞ் செப்பல் நாணுவரை இறத்தல்/
நோக்குவ எல்லாம் அவையே போறல்/
மறத்தல் மயக்கம்....(தொல்.களவியல்,நூ.8)
குறுந்தொகை 160: • குறுந்தொகை 160 / Kurunthohai 160
குறுந்தொகை 177: • குறுந்தொகை 177 / Kurunthohai 177
