குறுந்தொகை: பாடல் 292

குறுந்தொகை 292 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை

புனல் தரு பசுங் காய் தின்றதன் தப்பற்கு

ஒன்பதிற்று-ஒன்பது களிற்றொடு, அவள் நிறை

பொன் செய் பாவை கொடுப்பவும், கொள்ளான்,

பெண் கொலை புரிந்த நன்னன் போல,

வரையா நிரையத்துச் செலீஇயரோ, அன்னை!-

ஒரு நாள், நகை முக விருந்தினன் வந்தென,

பகை முக ஊரின், துஞ்சலோ இலளே.

தோழி இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகக் காப்பு மிகுதி சொல்லியது.

பரணர்

மண்ணிய - நீராட

ஒள் நுதல் - ஒளியுடைய நெற்றி

தப்பல் - தவறு, குற்றம்

ஒன்பதிற்று ஒன்பது - 9×9=81 எண்பத்தியொன்று

நிறை - எடை

பாவை - பெண்

நகை - சிரிப்பு

வரையா - மீளவே முடியாத

செலீஇயரோ - செல்ல வேண்டும்

துஞ்சல் - தூக்கம், வருத்தம்

மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ/

அழியல் வாழி தோழி நன்னன்/

நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய/

ஒன்று மொழிக் கோசர் போல/

வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே(குறுந்.73)

.......‌‍..........வேந்தனும்

அல்லவை செய்யான் காக்க;அதன்தலை,/

ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்/

சான்றோர் பலர்யான் வாழும் ஊரே (புறம்.191:4-7)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம். (குறள்.567)

படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து,/

உரு வினை நன்னன், அருளான், கரப்ப(அகம்.208:13-14)

Song 73: • குறுந்தொகை 73 / Kurunthohai 73

Song 298: • குறுந்தொகை 298 / Kurunthohai 298 #tamil #k...

Song 15: • குறுந்தொகை - 15

நன்றி : http ://tamil concordance.in