குறுந்தொகை: பாடல் 302

குறுந்தொகை 302 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?

அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்

பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;

அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,

''பிரியா நண்பினர் இருவரும்'' என்னும்

அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்

துஞ்சு ஊர் யாமத்தானும், என்

நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.

உரை

வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.

மாங்குடி கிழார்

இசின்- அசை நிலை

புரைத்து - உயர்வுடையது

அன்றே(அன்று+ஏ) - ஆகாது

அன்னோ - இரக்கக் குறிப்பு

ஊர் - ஊரார்(ஆகுபெயர்)

பெரும் பிறிது உற்றென (குறுந்.69:1)

மெய் பிறிதாகுதல் (குறுந்.195:8)

கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே(குறுந்.138:1)

நனம் தலை உலகமும் துஞ்சும்/ஓர் யான் மன்ற துஞ்சாதேனே(குறுந்.6:3-4)

அஞ்சு வரு நோயொடு துஞ்சாதேனே(அகம்.49:15)

அலர்எழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலர்அறியார் பாக்கியத் தால்.(குறள்.1141)

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.(குறள்.1148)

முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?/

ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,/

'ஆஅ! ஒல்'எனக் கூவு வேன் கொல்?-/

அலமரல் அசைவளி அலைப்ப என்/

உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.(குறுந்.28)

குறுந்தொகை 69: • குறுந்தொகை 69 / Kurunthohai 69

குறுந்தொகை 195: • குறுந்தொகை 195 / Kurunthohai 195