குறுந்தொகை: பாடல் 399
குறுந்தொகை 399 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை-காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரணர்
ஊர் - மக்கள் (ஆகுபெயர்)
கேணி - சிறு குளம்,ஊருணி
அற்றே - உவம உருபு
தொடுவுழி (தொடு+உழி) - (உழி 7ஆம் வேற்றுமை உருபு) தொடும் பொழுது
விடுவுழி (விடு+உழி) - விடும் பொழுது
பரத்தல் - பரவுதல்,பரவி நிற்றல்
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.(குறள்.1183)
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்புஊர் வது.(குறள்.1185)
விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு.(குறள்.1186)
அயல் இல் பெண்டிர் பசலை பாட (நற்.378:7)
தொடுவுழித் தொடுவுழி நீங்கின்றால் பசப்பே (கலி.130:21)
பழ நலம் இழந்து பசலை பாய (நற்.219:2)
அணி நலம் சிதைக்குமோர் பசலை (நற்.304:7)
முயங் காக் கால் பாயும் பசலை (நாலடி.40:1:1)
பசலை பாய்ந்த மேனியள் (அகம் 169:9)
மேனி மறைத்த பசலையள் (கலி.143:6)
நுதல் கவின் அழிக்கும் பசலை (நற்.73:10)
ஒண் நுதல் பசலை (அகம்.251:2)
பசலை பாய் தரு நுதல் (நற்.368:7)
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே (குறுந்.13:5)
பனி மலர் நெடுங் கண் பசலை பாய (ஐங்.477:1)
• குறுந்தொகை 41 / Kurunthohai 41
• குறுந்தொகை 98 / Kurunthohai 98
நன்றி - http ://tamil concordance.in
