குறுந்தொகை: பாடல் 382
குறுந்தொகை 382 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று; வம்பு'' என்று வற்புறீஇயது.
குறுங்கீரன்
முகை - அரும்பு
தலை திறத்தல் - மலர்தல்
அமல் - நெருக்கம்
தளவம் - செம்முல்லை
கஞல - கஞலுதல்,செறிதல்
புதுமை - காலம் அல்லாத காலத்தில் பெய்யும் மழை
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடை இடுபு,/
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்/
கதுப்பின் தோன்றும் புதுப் பூம் கொன்றைக்/
கானம் கார் எனக் கூறினும்/
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே. (குறுந்.21)
ஓதலாந்தையார்
நெடுங் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர(ஐங்.422:2)
நன்றி - http ://tamil concordance.in
குறுந்தொகை - 21 / Kurunthohai 21
குறுந்தொகை - 66 / Kurunthohai 66
குறுந்தொகை 94 / Kurunthohai 94
